முந்தைய எச் டி எஃப் சி லிமிடெட் வாடிக்கையாளர்களுக்கான முக்கிய தகவல்தொடர்பு

எச் டி எஃப் சி பேங்க் லிமிடெட் ("எச் டி எஃப் சி பேங்க்") உடன் முந்தைய ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ("இ-எச் டி எஃப் சி லிமிடெட்") ஒருங்கிணைப்பிற்கு பின்னர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியால் ஆலோசனை கூறப்பட்டபடி, அனைத்து இ-எச் டி எஃப் சி லிமிடெட் வாடிக்கையாளர்களின் ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்கப்படும் இறுதி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் எச் டி எஃப் சி வங்கிக்கு பொருந்தக்கூடிய வெளிப்புற பெஞ்ச்மார்க்கிற்கு மாற்றப்பட்டது. இது தொடர்பான தகவல்தொடர்பு ஆகஸ்ட் 12, 2023 முதல் செப்டம்பர் 16, 2023 வரை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இமெயில் வழியாக அனுப்பப்பட்டது.

சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை தொடர்ந்து வழங்குவதற்கான நோக்கத்துடன், இ-எச் டி எஃப் சி லிமிடெட்டின் அனைத்து சில்லறை வாடிக்கையாளர்களும் (ஒருங்கிணைப்பு தேதியின்படி) தங்கள் தகுதியின்படி வெளிப்புற பெஞ்ச்மார்க்குடன் இணைக்கப்பட்ட தற்போதைய வட்டி விகித பரவலை மீண்டும் நிர்ணயிக்கும் ஒரு முறை விருப்பத்தை பெற வங்கியை அணுகலாம். இந்த ஒரு-முறை விருப்பத்திற்கு எந்த கட்டணங்களும் விதிக்கப்படாது.
 

... மேலும் படிக்க

அடுத்த படிநிலைகள்:

- நீங்கள் ஒரு சில்லறை வாடிக்கையாளராக இருந்தால், உங்கள் தகுதியின்படி வெளிப்புற பெஞ்ச்மார்க்குடன் இணைக்கப்பட்ட உங்கள் தற்போதைய வட்டி விகித பரவலை மீண்டும் நிர்ணயிக்க ஒரு-முறை விருப்பத்தேர்வு உங்களிடம் உள்ளது. இருப்பினும், நீங்கள் 1 ஜூலை 2023 க்கு முன்னர் எச் டி எஃப் சி லிமிடெட்டில் இருந்து கடன் பெற்றிருந்தால் மற்றும் அதன் பின்னர் உங்கள் கடனை 1 ஜூலை 2023 முதல் இன்றுவரை மாற்றியிருந்தால், தயவுசெய்து இந்த தகவலை புறக்கணிக்கவும்.
- இந்த விருப்பத்தேர்வை பயன்படுத்த, எந்தவொரு எச் டி எஃப் சி வங்கி வீட்டுக் கடன் கிளையையும் அணுகவும் அல்லது எங்கள் இணையதளத்தில் வாடிக்கையாளர் போர்ட்டலில் உள்நுழையவும்.

எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நாங்கள் பாராட்டுகிறோம், மேலும் எங்கள் சேவைகளில் உங்கள் திருப்தியை உறுதிப்படுத்த நாங்கள் இருக்கிறோம்.

குறைவாக படிக்க